டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 14th April 2019 04:48 AM | Last Updated : 14th April 2019 04:48 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 17 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் மாணிக்க அத்தப்பகவுண்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 929 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.
கல்லூரி முதல்வர் ரத்தினவேலு ஆண்டறிக்கையை வாசித்து, பேசியது:
நாக் அமைப்பின் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் இக்கல்லூரி இந்திய அளவில் ஏ பிளஸ் பிளஸ் சான்றிதழ் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரை தன்னாட்சி விரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் 542 மாணவர்கள் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்றார்.
முன்னதாக என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி வரவேற்றார். முடிவில் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு நன்றி கூறினார்.
இவ்விழாவில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்க மதிப்பியல் தலைவர் பாலசுப்ரமணியம், என்ஐஏ பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னச்சாமி, தொழில் வர்த்தக சபைத் தலைவர்ஜி.டி.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.