வாக்குச் சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவை கண்காணிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.


கோவை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவை கண்காணிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 470 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 117 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன.  தேர்தல் எவ்வித முறைகேடுகள் இன்றியும் நியாயமாக நடைபெறுவதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன், கேமரா பொருத்தி அதன் மூலமும் கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக 2 ஆயிரம் கேமராக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது 1,880 வாக்குச் சாவடிகளில் கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com