சுடச்சுட

  

  பி.பி.ஜி. கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரம்

  By DIN  |   Published on : 16th April 2019 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், சரவணம்பட்டி பி.பி.ஜி. கல்விக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
   மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தியும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
  அதன் ஒரு பகுதியாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்விக் குழுமத்தின் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை பதிப்பு முதுநிலை மேலாளர் க.தியாகராஜன், கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 
  இதில், ஏராளமான மாணவ-மாணவியர் கைகளில் மெஹந்தி வரைந்தும், விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
  முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற செவிலியர் மாணவியர், இயன்முறை மருத்துவம், மருந்தியல் கல்லூரிகளின் மாணவ-மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கட்டாயம் வாக்களிப்போம் என பிரசாரப் பதாகையில் தங்களது கையெழுத்தை பதிவு செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai