சுடச்சுட

  

  வாக்குப் பதிவு சதவீதம் தெரிவிக்க செல்லிடப்பேசி செயலி பயன்பாடு

  By DIN  |   Published on : 16th April 2019 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவை தேர்தலில் வாக்குப் பதிவு நிலவரத்தை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தெரிவிக்கும் வகையில் போல் மானிட்டரிங் சிஸ்டம் (ல்ர்ப்ப் ம்ர்ய்ண்ற்ங்ழ்ண்ய்ஞ் ள்ஹ்ள்ற்ங்ம்) என்ற செல்லிடப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  மக்களவைத் தேர்தலுக்காக கோவை மாவட்டத்தில் 3070 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் பணிக்காக 14 ஆயிரத்து 724 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க வைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
  இந்நிலையில் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து பதிவேற்றம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் போல் மானிட்டரிங் சிஸ்டம் (ல்ர்ப்ப் ம்ர்ய்ண்ற்ங்ழ்ண்ய்ஞ் ள்ஹ்ள்ற்ங்ம்) என்ற செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் வாக்குச் சாவடி மையங்களில் பதிவாகும் வாக்குகள் சதவீதம் குறித்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவேற்றம் செய்வதற்கு வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  இது தொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: 
  வாக்குப் பதிவு நிலவரம் குறித்து தெரிவிக்கும் வகையில் செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வாக்கு சதவீதத்தை பதிவேற்றம் செய்வது குறித்த வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவேற்றம் செய்யப்படும் வாக்குப் பதிவு நிலவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப் பதிவு சதவீதம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai