திமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாது: இல.கணேசன்

திமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசினார்.

திமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசினார்.
நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் எம். தியாகராஜனை ஆதரித்து, மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் திங்கள்கிழமை பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:
பாஜக, அதிமுக கூட்டணி கொள்கை ரீதியிலான கூட்டணி. திமுக முறையான தலைமை இல்லாத கட்சி. இந்தத் தேர்தலுடன் திமுக கூண்டோடு அழிந்துவிடும். அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி தனது கடைசிக் காலத்தில் கூட கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலினை அறிவிக்கவில்லை. இதற்கு காரணம் மு.க.ஸ்டாலின் பண்பு இல்லாமலும் பொறுப்பு இல்லாமலும் நடந்து கொள்வதால்தான். 
இதே நிலையில்தான் மு.க.ஸ்டாலின் பிரசார மேடைகளில் பேசி வருகிறார். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.
எந்தக் காலத்திலும் ராகுல் காந்தி இந்தியப் பிரதமராகவும், மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராகவும் ஆக முடியாது என்றார்.
பிரசாரத்தில் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் வி.பி. ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் சக்திவேல், காரமடை நகரச் செயலாளர் விக்னேஷ், மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் மனோஜ் குமார், அதிமுக ஒன்றியச் செயலாளர் பி.டி. கந்தசாமி, நகரச் செயலாளர் டி.டி. ஆறுமுகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அன்னூரில்:  அன்னூரில் அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜனை ஆதரித்து, பயணியர் மாளிகை முன்பு இல.கணேசன் வாக்கு சேகரித்து பேசியதாவது:
 பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.
 இதில், தொகுதி பொறுப்பாளர் செ.ம.வேலுசாமி, ஒன்றியச் செயலாளர் அம்பாள் எஸ்.ஏ.பழனிச்சாமி, துணைசெயலாளர் ஓ.எஸ்.சாய்செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில்: கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் செய்தார். இதில், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன், பாஜக நிர்வாகிகள் விவேகானந்தன் பூபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com