வாக்கு எண்ணும் மையத்தில்  தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பொது பார்வையாளர்

கோவை மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் ரேணு ஜெய்பால் மற்றும் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 3070 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை தொகுதிக்கு தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கோவை (வடக்கு), கோவை (தெற்கு), சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பல்லடம் தொகுதியில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இம்மையத்தில் வைக்கப்பட்டு எண்ணப்பட உள்ளன.
இங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்று வருவதற்கும் தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ரேணு ஜெய்பால் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், உதவி தேர்தல் அலுவலர் டெய்சிகுமார் உள்ளிட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com