சுடச்சுட

  

  அன்னூர் வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

  By DIN  |   Published on : 17th April 2019 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 37 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடவடிக்கைகளை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டது. 
   தமிழகத்தில் வாக்குப் பதிவு நாளில் முழுமையான கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
   இந்நிலையில் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 117 வாக்குச் சாவடிகளில் 37 வாக்குச் சாவடிகளில் தற்போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai