சுடச்சுட

  

  இயற்கை வளங்கள் மீட்கப்படும்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

  By DIN  |   Published on : 17th April 2019 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான இயற்கை வளங்கள் மீட்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.கல்யாணசுந்தரம் கூறினார்.
  நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் பேராசிரியர் எஸ்.கல்யாணசுந்தரம் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை பல்லடம் அருகேயுள்ள மங்கலம் பகுதியில் தனது பிரசாரத்தை துவக்கினார். பின்னர் அங்கிருந்து சூலூர், சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம், வடவள்ளி பகுதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பயணித்து மருதமலை முருகன் கோயிலில் தனது பிரசாரப் பயணத்தை செவ்வாயக்கிழமை மாலை நிறைவு செய்தார். புளியகுளம் விநாயகர் கோயில் பகுதியில் அவர் பேசியதாவது:
  விவசாயிகள் நலனில் துளியும் அக்கறை இல்லாத கட்சிகள் தங்களை விவசாயிகளின் காப்பாளர் என்று பேசுகின்றன. வேளாண்துறை மீதும், விவசாயிகள் மீதும் அக்கறையுள்ள எந்த தலைவரும் கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டம், விவசாய நிலங்களில் உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டம், எட்டு வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்டவற்றை அனுமதிக்க மாட்டார்கள். மக்கள் நலனில் இவர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இவர்கள் செயல்படுத்தி வரும் மக்கள் விரோதத் திட்டங்களே சாட்சி. 
  நான் வெற்றி பெற்றால் கோவையில் விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கோவை மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான இயற்கை வளங்கள் மீட்கப்படும். காடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மனித-மிருக மோதல்கள் குறைக்கப்படும். கோவையில் நிலவிவரும் வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai