சுடச்சுட

  

  சிமென்ட் விலையை குறைக்க வலியுறுத்தல்: ஒப்பந்ததாரர்கள் அரசிடம் மனு

  By DIN  |   Published on : 17th April 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிமென்ட் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழக அரசின் சிறப்பு செயலாளரிடம் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
  இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அளித்துள்ள மனு: 
  தமிழகத்தில் சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூட்டாக இணைந்து சிமென்ட் விலையை உயர்த்தி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ரூ.340 ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை, திடீரென ரூ.380 ஆக அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் 11.76 சதவீதம் உயர்த்திவிட்டனர். இதனால் அரசு ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்கள், வீடு கட்டுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டுமான தொழிலே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கட்டுமான தொழிலை நம்பி 1.2 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். சிமென்ட் விலை உயர்வால், இந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த திடீர் உயர்வை உடனடியாக சிமென்ட் உற்பத்தியாளர் நிறுவனங்கள் திரும்ப பெற வேண்டும். மேலும்  அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சிமென்ட் திட்டமிட்டு தடுக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் தனிக்குழுவை அமைத்து திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   இந்த மனுவை தமிழக அரசின் சிறப்பு செயலாளர் க.பத்மநாபன் தொழில்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai