சுடச்சுட

  

  மக்கள் வாழ்வாதாரம் மேம்பட மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும்: பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

  By DIN  |   Published on : 17th April 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்கள் வாழ்வாதாரம் மேம்பட மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
  கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை செட்டி வீதியில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பேரணியை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தொடக்கி வைத்தார்.
  கருப்பக்கவுண்டர் வீதி, கெம்பட்டி காலனி, உக்கடம், ஒப்பணக்கார வீதி, சுக்ரவாரப்பேட்டை, பூ மார்க்கெட்,  வடகோவை, சாய்பாபா காலனி,  வெங்கிட்டாபுரம், இடையர்பாளயம், கவுண்டம்பாளையம், துடியலூர், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, சிவானந்தபுரம், கணபதி, காந்திபுரம், லட்சுமிமில்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாகச் சென்ற பேரணி மாலை 5 மணிக்கு பீளமேடு பகுதியில் நிறைவடைந்தது. 
   பிரசாரத்தின்போது வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டது போன்ற பொய்யான எண்ணத்தை மக்கள் மத்தியிலே எதிர்கட்சிகள் விதைத்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இளம் தொழில்முனைவோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டின் வரி வருவாயும் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியில் எவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று தொழில்துறையினர் விருப்பப்பட்டனரோ அவற்றை எல்லாம் சரி செய்துள்ளோம். மக்கள் வாழ்வாதாரம் மேம்பட மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும். உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்வதே பாஜகவின் நோக்கம் என்றார்.
  உடன் பாஜக மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai