சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட 371 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் புதன்கிழமை காலை அனுப்பிவைக்கப்பட உள்ளன.
  நீலகிரி தொகுதியில் மேட்டுப்பாளையத்தில் 321 வாக்குச் சாவடிகள், அவிநாசி 312, கூடலூர் 222, உதகை 239, பவானிசாகர் 294, குன்னூர் 223 என மொத்தம் 1,611 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
  மேட்டுப்பாளையம் தொகுதியில் 321 வாக்குச் சாவடி மையங்களில் மேட்டுப்பாளையத்தில் 17,  காரமடையில் 5 என மொத்தம் 22 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. 
  இந்நிலையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான பொருள்களை ஒதுக்கீடு செய்யும் பணி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான புனிதா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  ஒரு வாக்குச் சாவடி மையத்துக்கு பேனா, பென்சில், கைவிரல் மை, வாக்குச் சீட்டு படிவங்கள், அரக்கு, தீப்பெட்டி, உப்பு கரைசல் பவுடர் உள்ளிட்ட 11 பொருள்கள் ஒரே பையில் வைக்கப்பட்டன. 
  இந்த பைகள் புதன்கிழமை வாக்குச் சாவடி மையங்களுக்கு காலை 7 மணிக்கு அனுப்பப்படுகின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai