சுடச்சுட

  

  வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மாவட்டத் தேர்தல் அலுவலர்

  By DIN  |   Published on : 17th April 2019 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
  கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் 3,070 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்சாரம், குடிநீர், சாய்தள மேடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
  மேலும், வாக்குப் பதிவு நாளன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை வழங்காத நிறுவனங்களின் மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தாங்கள் கடைசியாக பணியாற்றிய நாளன்று பெற்ற ஊதியத்தையே 18-ஆம் தேதிக்கும் பெற்றுக் கொள்ளலாம்.
  அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. எனவே வாக்காளர்கள் அனைவரும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai