40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் உறுதி
By DIN | Published On : 17th April 2019 08:26 AM | Last Updated : 17th April 2019 08:26 AM | அ+அ அ- |

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் கோவை டவுன்ஹால், ராஜ வீதி தேர்நிலைத் திடலில் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரசாரத்தை நிறைவு செய்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக துயரங்களை அனுபவித்த மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் என்றார்.
பிரசாரத்தின் போது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...