Enable Javscript for better performance
வால்பாறையில் கன மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறையில் கன மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

    By DIN  |   Published on : 20th April 2019 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rains-23

    வால்பாறையில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவ வெயில் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் ஆறுகள், அருவிகள், நீரோடைகள், அணைகள் என அனைத்துப் பகுதிகளும் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்தது. 
    இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட்  பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசத்துவங்கியுள்ளது. 

    கோடை விடுமுறையும் துவங்கியுள்ள நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai