எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளி மாணவர்கள் 97 சதவீதம் தேர்ச்சி

காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர்.

காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இதில் 129  மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 97 சதவீத தேர்ச்சியாகும். 
இதில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 25  மாணவர்கள் பெற்றுள்ளனர்.  
கணக்குப் பதிவியல் பாடத்தில் 2 பேர், பொது இயந்திரவியல் பிரிவில் 2 பேர்,  கணிப்பொறியியலில் ஒருவர் என  மொத்தம் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 
இவர்களை பள்ளி  தாளாளர் வி.ராமகிருஷ்ணன், செயலாளர் எஸ்.ஜெயக்கண்ணன், முதல்வர் டி.லூசி தங்கராணி, ஒருங்கிணைப்பாளர்  பி.மூர்த்தி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com