மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
By DIN | Published On : 21st April 2019 04:16 AM | Last Updated : 21st April 2019 04:16 AM | அ+அ அ- |

காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் முடிந்து பல்வேறு கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு, முத்துக்கல்லூர், சுண்டக்கரைப்புதூர் மற்றும் காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பக்தி பஜனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் மேட்டுப்பாளையம், உதகை, குன்னூர், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, புஜங்கனூர், தாயனூர், வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.