வால்பாறையில் இடியுடன் கன மழை
By DIN | Published On : 21st April 2019 04:14 AM | Last Updated : 21st April 2019 04:14 AM | அ+அ அ- |

வால்பாறையில் இடியுடன் கனமழை பெய்தது. குளிச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை மதியம் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வால்பாறை 43 மி.மீ, மேல் நீராறு 18 மி.மீ, கீழ் நீராறு மற்றும் சோலையாறு பகுதியில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.