உலக புத்தக தினத்தையொட்டி கண்காட்சி
By DIN | Published On : 23rd April 2019 07:41 AM | Last Updated : 23rd April 2019 07:41 AM | அ+அ அ- |

உலக புத்தக தினத்தையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் ஏப்ரல் 23 முதல் 30 ஆம் தேதி வரை கோவையில் இரண்டு இடங்களில் புத்தக விற்பனைக் கண்காட்சி நடக்கிறது.
இது தொடர்பாக நியூ புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலக புத்தக தினத்தையொட்டி கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட நூல ஆணைக்குழு வளாகம் மற்றும் நேரு விளையாட்டு மைதானம் வளாகம் அகிய இரண்டு இடங்களில் கண்காட்சி நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் தமிழ், அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, சூழலியல், திருக்குறள், வேளாண்மை, மருத்துவம், பொது அறிவு, சங்க இலக்கியம், மாணவர்களுக்கான நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், பாரதியார் மற்றும் பாரதிதாசன் நூல்கள் என நூற்றுக்கணக்கான தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.
மேலும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் வாசகர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு கழிவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.