சூலூர் இடைத்தேர்தல்: நெறிமுறை மீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 18004254757 என்ற இலவச எண்ணில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  


சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 18004254757 என்ற இலவச எண்ணில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  
கோவை மாவட்டம் சூலூர் உள்பட தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தல் நடக்கவுள்ள மாவட்டங்களில் வாகனத் தணிக்கை உள்பட கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் தேர்தல் வீதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி மாவட்டத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தேர்தல் நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேர்தல் நெறிமுறை மீறல்கள் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 4757 என்ற இலவச எண்ணில் தொடர்புக் கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும் மாவட்டம் முழுவதும் வாகனத் தணிக்கை மேற்கொள்ள பறக்கும் படை மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com