பெ.நா.பாளையம் வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

கோவை மாவட்ட சமக்ர சிக்சா இயக்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்


கோவை மாவட்ட சமக்ர சிக்சா இயக்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளிக்குச் செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த மே 6 ஆம் தேதி வரையில் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், கோவை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் செங்கல் சூளைகளில் பணியாற்றுவோரின் குழந்தைகள், மிகப்பெரிய குடியிருப்புகளில் தங்கிப் பணியாற்றும் குடும்பக் குழந்தைகள், தெருவோரம் வசிப்போரின் குழந்தைகள், மாற்றுத் திறன் குழந்தைகள், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் குழந்தைகள் யாராவது பள்ளிக்குச் செல்லாமல் இருந்தால் அவர்களைக் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இதுதவிர இடைநின்ற குழந்தைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்பேரில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட 9 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள் மற்றும் துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் த.பிளாரன்ஸ் தலைமையில் பள்ளிக் கல்விக் குழு, மேலாண்மைக் குழு, சத்துணவு, அங்கன்வாடி திட்டப் பணிகளின் உதவியுடன் 15 ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com