அன்னாஜி ராவ் சாலையில் குப்பைத் தொட்டி இல்லாததால் சுகாதார சீர்கேடு

மேட்டுப்பாளையம் அன்னாஜி ராவ் சாலையில் மார்க்கெட் பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால் அப்பகுதியில்

மேட்டுப்பாளையம் அன்னாஜி ராவ் சாலையில் மார்க்கெட் பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
மேட்டுப்பாளையம் அன்னாஜி ராவ் சாலையில் அரசு மருத்துவமனை, மார்க்கெட், பழைய இரும்புக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த பகுதிக்கு மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மார்க்கெட் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிக் கழிவுகள் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள நுழைவு வாயில் பகுதியில் கொட்டுப்படுகின்றன. இந்த குப்பைகள் அனைத்தும் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, மேட்டுப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஆய்வு செய்து குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com