முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கைப்பந்துப் போட்டி: சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்கள் வெற்றி
By DIN | Published On : 04th August 2019 09:22 AM | Last Updated : 04th August 2019 09:22 AM | அ+அ அ- |

கைப்பந்துப் போட்டியில் மேட்டுப்பாளையம், கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையே 19 வயதுக்குள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டி திருச்செங்கோடு எஸ்எஸ்எம் சென்ட்ரல் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவர், மாணவிகள் அணியினர் வெற்றி பெற்றனர்.
இம்மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளியின் செயலாளர் கவிஞர் கவிதாசன், கல்வி ஆலோசகர் வே.கணேசன், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் உடற்கல்வி இயக்குநர் ஜெரால்டு ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.