முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோயில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு
By DIN | Published On : 04th August 2019 09:25 AM | Last Updated : 04th August 2019 09:25 AM | அ+அ அ- |

ஆடிப்பெருக்கை ஒட்டி பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடிப்பெருக்கை ஒட்டி ஆழியாற்றில் அம்பராம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு ஆற்றில் நீராடினர். புதிதாக திருமணமானவர்கள் ஆற்றில் நீராடி, புதிய தாலிக்கயிறு மாற்றினர். பலர் தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்தனர். இதேபோல, ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சேத்துமடை காளியம்மன் கோயில், திரௌபதி அம்மன்கோயில், பொள்ளாச்சி மாரியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆழியாறு அணை, குரங்கு அருவி, டாப்சிலிப் போன்ற சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.