Enable Javscript for better performance
ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் துவக்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் துவக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 05th August 2019 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை உள்ளாச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
     கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வார்டு எண். 90, 91 ஆகிய பகுதிகளில் ரூ.49.60 லட்சம் மதிப்பிலான சிறுவர் பூங்கா, எல்இடி தெரு விளக்குகள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். 
     இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தலைமை வகித்தார். தெற்கு மண்டலம் 91ஆவது வார்டு பகுதியில் உள்ள ஜிஆர்ஜி கார்டன் பகுதியில் ரூ.13.80 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவருடன் கூடிய சிறுவர் விளையாட்டுப் பூங்கா, 90ஆவது வார்டு கோவைப்புதூர் பகுதியில் எல்இடி தெரு விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.  இதையடுத்து மதுக்கரை, அண்ணா நகர் பகுதியில் பேருந்து சேவையையும், ரூ.25.90 லட்சம் மதிப்பில் குடிசை மாற்று வாரியம் மூலம் அமைக்கப்பட்ட 3 ஆழ்குழாய் கிணறுகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.   இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ச.பிரசன்ன ராமசாமி, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai