Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு மானியத்தில் காய்கறி விதைகள் வழங்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு மானியத்தில் காய்கறி விதைகள் வழங்க முடிவு

    By DIN  |   Published on : 05th August 2019 10:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூரில் சாலை விரிவாக்கப் பணிகளின்போது ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சூலூர் வட்டாட்சியரிடம் பாஜகவினர் அண்மையில்  மனு அளித்தனர். 
    சூலூரில் காங்கேயம்பாளையத்திலிருந்து சிந்தாமணிப்புதூர் வரையிலான 7.5 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சூலூர் நகரத்தில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை குறுகலாகவே அமைக்கப்படுகிறது.
     இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சூலூர் பாஜக நகரத் தலைவர் ரவி தலைமையில் அக்கட்சியினர், வட்டாட்சியர் மீனாகுமாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். 
    மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai