524 புகார்கள் மீது நடவடிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் தகவல்

கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்செவி எண்ணில்

கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்செவி எண்ணில் இதுவரை 524 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
 உணவுப் பொருள்களில் கலப்படம், தரமற்ற உணவுப்பொருள்கள் விற்பனை போன்றவை தொடர்பான புகார்களை தெரிவிக்க உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் கட்செவி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் இந்த எண்ணுக்கு இதுவரை 524 புகார்கள் பெறப்பட்டு, அவை அனைத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது: 
 நுகர்வோரிடமிருந்து பெறப்படும் தரமற்ற உணவுகள் விற்பனை குறித்த புகார்கள் அந்தந்தப் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
அதன்படி மாவட்டத்தில் கடந்த ஜூலை வரை 524 புகார்கள் பெறப்பட்டு, அனைத்துப் புகார்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
இதுகுறித்து புகார் அளித்த நுகர்வோருக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து நுகர்வோர் உணவுப்பொருள்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற கட்செவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com