போக்குவரத்து விதிமீறல்: ஒரு வாரத்தில் ரூ. 6 லட்சம் அபராதம் வசூல்

கோவை போக்குவரத்து சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதி மீறிய

கோவை போக்குவரத்து சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதி மீறிய வாகனங்களின் உரிமையாளர்களிடமிருந்து ரூ. 6 லட்சத்து 27 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 
கோவை போக்குவரத்து சரகத்துக்கு உள்பட்ட மாநகரம், புறநகரப் பகுதிகளில் விதிமீறி இயங்கும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 26-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதி வரை மாநகரம், புறநகரப் பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 
 இதில் 1,226 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இவற்றில் போக்குவரத்து விதிமீறி இயக்கப்பட்டதாக 302 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன. வரி செலுத்தாமல்  இயக்கப்பட்ட வாகனங்கள், உயர் அழுத்தக் காற்று ஒலிப்பான் பயன்படுத்திய தனியார் பேருந்துகள், கண் கூசும் விதமாக முகப்பு விளக்குகள் பொருத்தியது உள்ளிட்ட விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடமிருந்து ரூ. 6 லட்சத்து 27 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.   உரிய வாகனங்களின்றி இயக்கப்பட்டு வந்த வேன், சரக்கு ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com