பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல்
By DIN | Published On : 09th August 2019 08:50 AM | Last Updated : 09th August 2019 08:50 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி அருகே செயல்பட்டுவந்த பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்கோட்டாம்பட்டி ஊராட்சி, ரங்கசமுத்திரம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக கோட்டாட்சியர் ரவிகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான வருவாய்த் துறையினர் ரங்கசமுத்திரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ரங்கசமுத்திரம் பகுதியில் செயல்பட்ட நிறுவனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். நிறுவனத்தின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே ரங்கசமுத்திரம் பகுதியில் செயல்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடந்த சில நாளகளுக்கு முன்பு அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.