சுடச்சுட

  

  மேட்டுப்பாளையம் அருகே டாக்டர் ஆர்.வி.கலை, அறிவியல் கல்லூரியில் கோவை வசந்த வாசல் கவி மன்றம் சார்பில் சுதந்திர தின கவியரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் வே.சுகுணா வரவேற்றார். கோவை வசந்த வாசல் கவி மன்றத்தின் செயலாளர் தமிழருவி கோவை கோகுலன் தலைமை வகித்தார். இதில் மன்றத்தின் துணைத் தலைவர் வழக்குரைஞர் இரா.சண்முகம், நம்பிக்கை நாகராஜன், பிரேமா, கோவை அன்பு, ரூஃபஸ் வீ.அந்தோணி, கவிஞர் மைதிலி யோகராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
  முடிவில் மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறைத் தலைவர் இரா.ஜெயந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai