சுடச்சுட

    

    சிங்காநல்லூர் பகுதியில் 55 கண்காணிப்பு கேமராக்கள், புறக்காவல் நிலையம்: மாநகர காவல் ஆணையர் துவக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 15th August 2019 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிங்காநல்லூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 55 கண்காணிப்பு கேமராக்களையும், சீரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தையும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் புதன்கிழமை துவக்கிவைத்தார்.
    கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்கள், நகைப் பறிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநகர் முழுவதும் போலீஸார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர். 
    இதில் மாநகர போலீஸாருடன் இணைந்து தன்னார்வ அமைப்புகளும், குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து வருகின்றனர்.
    முதற்கட்டமாக பீளமேடு, சாய்பாபா காலனி, காட்டூர், போத்தனூர் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 55 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல, சீரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
    இதனை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் புதன்கிழமை துவக்கிவைத்து பேசியதாவது: கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் அமைக்கப்படுவது மூலம் குற்றவாளிகளை எளிதாக கண்டறியவும், வழக்கை துரிதமாக முடிக்கவும் உதவி வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு தயங்குகின்றனர் என்றார்.
    நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், உதவி ஆணையர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai