சுடச்சுட

  

  பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் "நல்ல குடிமகனின் பொறுப்புகள்' என்ற தலைப்பிலான கல்வி மற்றும் செயல்திட்ட விளக்கக் கண்காட்சி செவ்வாய்கிழமை தொடங்கியது.
  ஆண்டு "நல்ல குடிமகனின் பொறுப்புகள்' என்ற தலைப்பில், 5 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாதிரிகளைத் தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
  நுகர்வோர் உரிமைகள், இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம், நீர்மேலாண்மை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகள், தாவரங்கள்-விலங்குகள்-பறவைகளைப் பாதுகாப்பதன் இன்றியமையாமை, வீட்டிற்கும், நாட்டிற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆகிய துணைத் தலைப்புகளில் மாதிரிகளை மாணவ மாணவிகள் வைத்திருந்தனர்.  
  இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சித்ரா செளந்திரராஜன் முன்னிலை வகித்தார். நிர்வாக செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் புதிய தாளாளராகப் பொறுப்பேற்றுள்ள என்.கிருஷ்ணகுமார் கண்காட்சியை திறந்துவைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai