சுடச்சுட

    

    17,18 இல் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வீடு, கார் கடன் கண்காட்சி

    By DIN  |   Published on : 15th August 2019 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வீடு, கார் கடன் கண்காட்சி ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
    அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியைவங்கியின் துணைப் பொது மேலாளர் ஏ.ஜி.கே.சத்தியபிரகாஷ் தொடங்கிவைக்கிறார். விழாவில், பிரிக்கால் நிறுவனத் தலைவர் வனிதா மோகன், திரைப்பட நடிகை தேவயானி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்தக் கண்காட்சி மூலம் கடன் பெறுபவர்களுக்கு வீட்டுக் கடன் எனில் வட்டி விகிதத்தில் 0.1 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும், வேறு வங்கிகளில் இருந்து எஸ்.பி.ஐ.க்கு கடனை மாற்றுபவர்களுக்கு 0.25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இதில், 30க்கும் மேற்பட்ட முன்னணி வீடு கட்டும் நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைக்க உள்ளனர்.
    இதில் ரூ.15 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான புதிய வீடு திட்டங்களுக்கு முன்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், முன்னணி கார் நிறுவனங்கள் தங்களின் புதிய ரக கார்களை இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கின்றனர்.
    இதையொட்டி, உணவுத் திருவிழா, இலவச மெஹந்தி, குழந்தைகளுக்கான விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற இருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai