ஆந்திரா வங்கியில் குறுகிய கால கடனுக்கு வட்டி விகிதம் குறைப்பு

ஆந்திரா வங்கி சார்பில் வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா வங்கி சார்பில் வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா வங்கியின் தொழில்முனைவோர், வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. மண்டல மேலாளர் பார்த்தசாரதி முரளி, முதன்மை மேலாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிகாரிகள் பேசியது:
கோவை மண்டலத்தில் ஆந்திரா வங்கிக்கு 80 கிளைகளும், 99 ஏ.டி.எம். மையங்களும் உள்ளன. இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கி ரூ.52 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால், ஆந்திரா வங்கியும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகத்தை 8.70 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாக குறைத்துள்ளது. இது ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கியின் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக வீட்டுக் கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில், உதவிப் பொது மேலாளர் கீதா, பிரதான கிளை உதவிப் பொது மேலாளர் செந்தில்குமார், வங்கி வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com