கிராம சபைக் கூட்டம்: நியாய விலை  கடைகள் சமூக தணிக்கை: ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை (இன்று) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் முன்னிலையில்

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை (இன்று) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் நியாய விலைக் கடைகளின் சமூக தணிக்கை  மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜயந்தி மற்றும் சிறப்பு கிராம சபை என 5 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்போது, கிராமத்தின் வரவு செலவு கணக்குகள், கிராம வளர்ச்சித் திட்டம், பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.
தற்போது, சுதந்திர தினத்தை ஒட்டி வியாழக்கிழமை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிகளின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் சமூக தணிக்கை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும். 
இதில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்த அனைத்த வித கணக்குகளும் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளது. பொது விநியோகத் திட்டம்,  நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டில் வெளிப்படையான நடைமுறையை மேற்கொள்ளும் வகையில் மக்கள் முன்னிலையில் சமூக தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, கிராம மக்கள் சமூக தணிக்கையில் கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குளறுபடிகள், பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com