சச்சிதானந்த ஜோதி நிகேதனில் சகோதயா பள்ளிகளுக்கான விநாடி வினா போட்டி

கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் சிபிஎஸ்இ பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையிலான விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. 

கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் சிபிஎஸ்இ பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையிலான விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. 
கோவை சகோதயா கூட்டமைப்பைச் சேர்ந்த 10 சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து 20 அணிகள் தகுதிச் சுற்றில் கலந்து கொண்டன. அதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வான கோவையைச் சேர்ந்த கீதாஞ்சலி பள்ளி, பி.எஸ்.ஜி. பள்ளி, சந்திரகாந்தா பள்ளி, விவேகானந்தா அகாதெமி, வித்யா நிகேதன் பள்ளி, உதகை லாரன்ஸ் பள்ளி ஆகிய சிபிஎஸ்இ பள்ளி அணிகள் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தேர்வாகினர். 
8 சுற்றுகளாக நடந்த விநாடி வினா போட்டியில் உதகை லாரன்ஸ் பள்ளி அணி 47 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், பி.எஸ்.ஜி. பள்ளி 46 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தையும், வித்யா நிகேதன் பள்ளி 36 மதிப்பெண்களுடன் 3 ஆம் இடத்தையும் பிடித்தன. 
முதலிடம் பெற்ற உதகை லாரன்ஸ் பள்ளி அணிக்கு சான்றிதழ்களுடன் ரூ. 5,000 பரிசு, சுழற்கோப்பையை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் செயலாளர் கவிதாசன் வழங்கினார். 
விநாடி வினா போட்டியை புவியியல் ஆசிரியர் ப.முருகேசன் நடத்தினார். கல்வி ஆலோசகர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் ரா.உமாமகேஸ்வரி, துணை முதல்வர்  சு.சக்திவேல் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதில் கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com