Enable Javscript for better performance
கேரள மாநிலம் வட்டப்பாறையில் போலீஸார் தீவிர வாகன சோதனை- Dinamani

சுடச்சுட

    

    கேரள மாநிலம் வட்டப்பாறையில் போலீஸார் தீவிர வாகன சோதனை

    By DIN  |   Published on : 24th August 2019 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் எதிரொலியால் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின் வட்டப்பாறையில் அந்த மாநில போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
     தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், கோவையில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கேரள மாநிலத்திலும் போலீஸார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
     கேரளத்தில் தமிழக எல்லையான வட்டப்பாறை அருகே வாளையாறு காவல் உதவி ஆய்வாளர் சாஜி தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீஸார் தமிழகத்தில் இருந்து கேரளம் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் சந்தேகப்படும்படியான சுமார் 62 வாகனங்களின் எண்களை பதிவு செய்த அவர்கள், சந்தேகப்படும் நபர்களின் ஆதார் அட்டைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai