Enable Javscript for better performance
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு 125-ஆம் ஆண்டு நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு  125-ஆம் ஆண்டு நிறைவு விழா

    By DIN  |   Published on : 24th August 2019 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. உதவி தலைமையாசிரியை வி.பாக்கியவதி தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய உயர்நிலைப் பள்ளி செயலர் சுவாமி தமோஹரானந்தர் விழாவைத் துவக்கிவைத்து, சுவாமி விவேகானந்தர் கருத்துகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி - வினா போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி 
    பெற்றவர்களுக்கு சுவாமி தமோஹரானந்தர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
    விழாவில் வித்யாலய உயர்நிலைப் பள்ளி தலைமையாசியார் எஸ்.வீரகுமார், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழாசிரியர் முனியாண்டி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai