கேம்போர்டு பள்ளியில் கால்பந்து போட்டி

கோவை கேம்போர்டு சர்வதேசப் பள்ளி மைதானத்தில் கோல்டன் பூட் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

கோவை கேம்போர்டு சர்வதேசப் பள்ளி மைதானத்தில் கோல்டன் பூட் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
 கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளிகளின் அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், 18 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் சீனியர் செகண்டரி பள்ளி முதலிடம் பிடித்தது. டெல்லி பப்ளிக் பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. 16 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் டெல்லி பப்ளிக் பள்ளி முதலிடமும், டாக்டர் தசரதன் சர்வதேசப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களுக்கும் பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம் சியல் ஆகியோர் பரிசளித்துப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com