நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கு தொழில் துறையினர் வரவேற்பு

வங்கித் துறை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்புகளை கோவை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

வங்கித் துறை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்புகளை கோவை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
 இது தொடர்பாக கொடிசியா தலைவர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
 வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும் என்றும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிதியில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி உடனடியாக வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தையும், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தையும் இணைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  அதேபோல், கடனை முடித்துக் கொண்ட 15 நாள்களுக்குள் கடன் ஆவணங்களை வங்கிகள் திருப்பி வழங்க வேண்டும் என்ற உத்தரவும், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. தொகையை உரியவர்களுக்கு 30 நாள்களில் திருப்பி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் சிறு, குறு தொழில் துறையினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
 இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறும்போது, மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள வங்கி நடைமுறை சீர்திருத்தங்கள் தொடர்பான அறிவிப்புகள் தொழில் துறையினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளன. வங்கிக் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்கள் குறையும் நிலை ஏற்பட்டிருப்பதும், ஜி.எஸ்.டி. நிலுவைகள் 30 நாள்களில் திருப்பி வழங்கப்படும் என்ற அறிவிப்பும், ஜி.எஸ்.டி. நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்படும் என்று கூறியிருப்பதும் வரவேற்கத்தக்கவை.  மூன்று கட்டங்களாக அறிவிப்புகளை வெளியிடுவதாக அமைச்சர் கூறியுள்ள நிலையில், அடுத்தடுத்த 2 கட்டங்களில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரும் என்பதை ஜவுளித் தொழில் துறையினரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com