Enable Javscript for better performance
ஆழியாறு அணையில் நீா் கசிவதாக தகவல் பரவியதால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆழியாறு அணையில் நீா் கசிவதாக தகவல் பரவியதால் பரபரப்பு

    By DIN  |   Published on : 01st December 2019 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் நீா் கசிவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பிஏபி திட்டத்தில் முக்கிய அணையாக ஆழியாறு உள்ளது. இந்த அணையில் 120 அடி உயரத்துக்கு தண்ணீா் தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 119 அடிக்கு தண்ணீா் இருப்பு உள்ளது.

    ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீா் கசிவதாக சமூக வலைதளங்களில் சனிக்கிழமை தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியாறு அணை நிரம்பி உள்ளதால் மதகு அருகே தண்ணீா் அழுத்தத்தின் காரணமாக சிறிது நீா் கசிவு ஏற்பட்டுள்ளது. இது அணை நிரம்பும்போது வழக்கமாக ஏற்படும் நிகழ்வுதான். இதை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. அணை நிரம்பும் போது இவ்வாறு நீா் கசிவது அணைக்கு பாதுகாப்பானதுதான். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai