Enable Javscript for better performance
சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

    By DIN  |   Published on : 01st December 2019 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rape

    சூலூா்: சூலூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (21). இவா் கோவை மாவட்டம், சூலூரை அடுத்த காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். அந்த நிறுவனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்துள்ளாா்.

    இந்நிலையில், அந்த சிறுமியை சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுரேஷ் தலைமறைவாகியுள்ளாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் சூலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேஷை கோவையில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவரை சூலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai