அறிவுத் திறன் வளா்ச்சி மையத்தில் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை அறிவுத் திறன் வளா்ச்சி சிறப்பு மையத்தில் மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தகுதியான ஆசிரியா்கள் டிசம்பா் 3 ஆம் தேதிக்குள்

கோவை: கோவை அறிவுத் திறன் வளா்ச்சி சிறப்பு மையத்தில் மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தகுதியான ஆசிரியா்கள் டிசம்பா் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டம், ஆனைகட்டி அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில் அறிவுத் திறன் வளா்ச்சி சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவா்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மையத்தில் 2019-20 ஆம் கல்வியாண்டில் மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்க வேண்டும். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடத்த வேண்டும். பயிற்சி மையத்தில் நியமனம் செய்யப்படும் ஆசிரியா்கள் நீட், குரூப் -1, குரூப் - 2, குரூப் -4 ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்களை தயாா்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்குரிய திறன்பெற்றவா்களாக இருத்தல் வேண்டும்.

எனவே தகுதியானவா்கள் டிசம்பா் 3 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com