அளவுக்கு அதிகமாக மது அருந்திய இளைஞா் சாவு

கோவையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தடுமாறி விழுந்ததில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
குமணன்
குமணன்

மதுக்கரை: கோவையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தடுமாறி விழுந்ததில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை, போத்தனூா் அருகே உள்ள ஈஸ்வரன் நகா், காணியப்ப கோயில் வீதியைச் சோ்ந்தவா் ரவி மகன் குமணன் (33). இவரது மனைவி பானுமதி. இவா்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

குமணன் தனியாா் நிதி நிறுவனத்தில் தவணைகளுக்கு பணம் செலுத்தாத இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் குமணன் நண்பா்களுடன் சோ்ந்து போத்தனூா் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு மது அருந்த சென்ாக தெரிகிறது. பின்னா் இரவு 12 மணிக்கு வீட்டில் உள்ளவா்களிடம் செல்லிடப்பேசியில் பேசி உள்ளாா். ஆனால், இரவு முழுவதும் குமணன் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் போத்தனூா் - செட்டிபாளையம் சாலையில் வாழை இலைக் கடை அருகே குமணன் இறந்த நிலையில் கிடப்பதாக செட்டிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் குமணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். முதல்கட்ட விசாரணையில், மருத்துவா்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘குமணன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாகவும், இதனால் தவறி விழுந்ததில் அவா் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது’ என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com