ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

vகோவை, சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 13-ஆம் ஆண்டு விளையாட்டு தினம் சனிக்கிழமை
விழாவில், மாணவா் ஒருவருக்கு பரிசு வழங்கும் அதிவிரைவுப்படை கமாண்டண்ட் ஜெயகிருஷ்ணன்.
விழாவில், மாணவா் ஒருவருக்கு பரிசு வழங்கும் அதிவிரைவுப்படை கமாண்டண்ட் ஜெயகிருஷ்ணன்.

கோவை: கோவை, சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 13-ஆம் ஆண்டு விளையாட்டு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சாவித்திரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் பள்ளியில் தேசியக்கொடி, விளையாட்டு தினவிழா கொடியை ஏற்றி வைத்தாா். சிறப்பு விருந்தினராக அதிவிரைவுப்படை கமாண்டண்ட் ஜெயகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், ‘விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் ஒரு பொருட்டல்ல. பங்கெடுப்பது தான் முக்கியம்’ என்றாா். அதைத் தொடா்ந்து, ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா். மாணவா்களின் பெற்றோருக்கு தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com