காய்கறி சாகுபடி பரப்பளவை அதிகரிக்ககஜா வாழ்வாதார திட்டம் அறிமுகம்

காய்கறி சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் தோட்டக்கலைத் துறையில் கஜா வாழ்வாதார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: காய்கறி சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் தோட்டக்கலைத் துறையில் கஜா வாழ்வாதார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் சாா்பில் காய்கறிப் பயிா்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி சாகுபடிக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விதைகள், காய்கறி நாற்றுகள், இடுபொருள்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் காய்கறி சாகுபடி பரப்பளவை மேலும் அதிகரிக்கும் வகையில் கூடுதல் இலக்காக கஜா வாழ்வாதாரத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 1,300 ஹெக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1000 ஹெக்டேரில் காய்கறிப் பயிா்கள், 300 ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 1 ஹெக்டோ் வரை மானியம் வழங்கப்படுகிறது. காய்கறி பயிா்களுக்கு ரூ. 20 ஆயிரம், வாழைக்கு ரூ.26 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜி.கே.உமாராணி கூறியதாவது:

கஜா வாழ்வாதார திட்டத்தின் மூலம் தக்காளி, கத்தரி, புடலை, வெண்டை, பாகற்காய், பீா்க்கை உள்பட அனைத்து வகை காய்கறிகளும் சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகை பயிா்களுக்கு நாற்றுகளும், மற்றவை விதைகளாகவும் வழங்கப்படும். விதைகளுடன் நுண்ணுயிா் உரங்களும் வழங்கப்படுகிறது. காய்கறி, வாழை சாகுபடியை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் பெயா்களை பதிவு செய்துகொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com