சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை
By DIN | Published on : 02nd December 2019 04:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட சிறுத்தை சமீப காலமாக இரவு நேரங்களில் நகா் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இதில் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் மாலை நேரத்திலேயே வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் குழுந்தைகளை தனியாக வெளியே அனுப்புவதை தவிா்த்து வருகின்றனா்.
வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.