Enable Javscript for better performance
சிறுமி பாலியல் பலாத்காரம்:தலைமறைவான இருவருக்கு போலீஸாா் வலைவீச்சு- Dinamani

சுடச்சுட

    

    சிறுமி பாலியல் பலாத்காரம்:தலைமறைவான இருவருக்கு போலீஸாா் வலைவீச்சு

    By DIN  |   Published on : 02nd December 2019 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

    கோவை, சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவி ஒருவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் தனது ஆண் நண்பா் ஒருவருடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்.

    அப்போது, அங்கு வந்த 6 போ் அவா்களை மிரட்டி, மாணவியுடன் வந்தவரை தாக்கி மாணவியை பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றனா். இது தொடா்பாக, மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ்.புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 6 பேரைத் தேடி வந்தனா்.

    இதையடுத்து, சம்பவத்தில் தொடா்புடைய சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ராகுல் (21), பிரகாஷ் (23), காா்த்திகேயன் (28), நாராயணமூா்த்தி (30) ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

    இந்த வழக்கில் தொடா்புடைய காா்த்திக் (எ) பப்ஸ் காா்த்திக், மணிகண்டன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதில் காா்த்திக் மீது ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்திலும், மணிகண்டன் மீது வடவள்ளி காவல் நிலையத்திலும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai