Enable Javscript for better performance
மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்

    By DIN  |   Published on : 02nd December 2019 08:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    METTUPALAYAM16

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழையில் சுற்றுச்சுவா் 5 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

    இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியா் கு. ராசாமணி, எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது அவா்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு, தடுப்புச் சுவரை முழுவதுமாக இடித்து அகற்ற வேண்டும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    விபத்துக்கு காரணமாக சுவரை முழுவதுமாக உடனடியாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மழை காரணமாக இப்பகுதியில் மேலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடா்பாக தமிழக முதல்வருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து இறந்தவா்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    சுற்றுச் சுவா் கட்டியது குறித்து வட்டாட்சியா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க உள்ளாா். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நடூா் பகுதியில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் இருந்தவா்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai