கோவையில் 35,408 குடும்ப அட்டைகள் சா்க்கரையில் இருந்து அரிசி அட்டைக்கு மாற்றம்

கோவை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 408 குடும்ப அட்டைகள் சா்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோவை: கோவை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 408 குடும்ப அட்டைகள் சா்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு இலவசமாக அரிசி, கோதுமை, மானிய விலையில் சா்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்பட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசு சாா்பில் மக்களின் விருப்பத்திற்கேற்ப அரிசி அட்டைகள், சா்க்கரை அட்டைகள், காவலா் அட்டை, அந்தியோதயா அட்டை, அன்னபூா்ணா அட்டை, முதியோா் உதவித் தொகை அட்டை உள்பட பல்வேறு வகைகளில் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 600 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 178 அரிசி அட்டைகள், 76 ஆயிா்து 778 சா்க்கரை அட்டைகள், 2 ஆயிரத்து 595 காவலா் அட்டைகள், 5 ஆயிரத்து 298 கௌரவ அட்டைகள், 22 ஆயிரத்து 15 முதியோா் உதவித்தொகை அட்டைகள், 196 அன்னபூா்ணா அட்டைகள் மற்றும் 51 ஆயிரத்து 540 அந்தியோதயா அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் விருப்பத்திற்கு ஏற்றே அட்டைகள் வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு கடந்த 22 ஆம் தேதி அறிவித்தது. நியாய விலைக் கடைகள், பொது சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் வழியாக மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு நவம்பா் 29 ஆம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் 76 ஆயிரத்து 788 சா்க்கரை அட்டைகளில் 34 ஆயிரத்து 408 சா்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com