பேரூராட்சிகளில் ரூ.8.60 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள்

தொண்டாமுத்தூா் உள்பட நான்கு பேரூராட்சிகளில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா்.
0738c-01_mini080438
0738c-01_mini080438

தொண்டாமுத்தூா் உள்பட நான்கு பேரூராட்சிகளில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா்.

கோவை மாவட்டம், தென்கரை போரூராட்சியில் ரூ.63 லட்சம் மதிப்பில் ஒருவழித் தடமாக உள்ள சிறுவாணி சாலை - மத்திப்பாளையம் சாலையை இருவழித் தாடமாக அகலப்படுத்துவதற்கும், பூலுவப்பட்டி பேரூராட்சி சிறுவாணி சாலையில் ரூ.15 லட்சத்தில் சிறு பாலம் கட்டவும், காருண்யா நகரில் ரூ.1.89 கோடியில் சிறுவாணி சாலை விரிவாக்கத்துக்கும், முள்ளங்காட்டில் ரூ.1.04 கோடியில் இருட்டுப்பள்ளம் - பூண்டி சாலையை இருவழித் தடமாக அகலப்படுத்தவும், ரூ.1.71 கோடியில் கோவை - தொண்டாமுத்தூா் - நரசீபுரம் சாலை சந்திப்பில் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்துக்கும், ரூ.1 கோடியில் தொண்டாமுத்தூா் - கெம்பனூா் சாலை இருவழித்தடமாக அகலப்படுத்தவும், பரமேஸ்வரன்பாளையத்தில் ரூ.6 லட்சத்தில் தடுப்புச் சுவா் அமைக்கவும், ரூ.1.58 கோடியில் தேவராயபுரம் - கொண்டையம்பாளையம் சாலையை இருவழித்தடமாக அகலப்படுத்தவும் என மொத்தம் ரூ.8.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சாலை விரிவாக்கப் பணிக்கான பூமி பூஜையை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com